நமது அரசியல் வரலாற்றைப் பார்த்தால், நாம் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் 20 ஆண்டுகளுக்கு ஆளும் கட்சிகளே மீண்டும் 90 சதவீதம் ஆட்சிக்கு வந்துள்ளன. பின்னர் இந்த சதவீதம் 75 ஆக அடுத்த 25 ஆண்டுகளில் குறைந்தது. தற்போது இந்த விகிதம் 50:50 ஆக உள்ளது. அதாவது மக்களுக்கு நல்லது செய்யும் ஆளும் கட்சிகள், தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்கின்றன.
இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் 4 சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆளும் கட்சி வெற்றி நோக்கிச் செல்வதும், வளர்ச்சித் திட்டஙகளில் கவனம் செலுத்தாத ஆளும் கட்சி தோல்வியைத் தழுவும் நிலையும் காணப்படுகிறது. டில்லியில் மட்டும் வித்தியாசமான நிலை காணப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் மீது மக்கள் கோபம் கொண்டிருந்தாலும் மாற்றுக் கட்சியான பா,ஜ.,வுக்கு முழு ஆதரவு கொடுக்காமல், ஊழலை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய ஆம் ஆத்மி கட்சியையும் பா.ஜ.,வுக்கு இணையாக ஆதரித்துள்ளனர். இதனால் டில்லியில் மட்டும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ராஜஸ்தானில் பா.ஜ., இழந்த பெருமையை மீட்டு, மிகப் பெரிய பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வர இருக்கிறது. இங்கு அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மக்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு மீண்டும் பதவிக்கு வர இருக்கிறது. குஜராத் முதல்வர் மோடிக்கு அடுத்தபடியாக, சிறந்த முதல்வர் என்ற பெயரைப் பெற்றவர் சவுகான். மக்கள் நலனிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் இவர் காட்டிய அக்கறை மற்றும் மோடியின் பிரசாரம், இவர் மீண்டும்ஆட்சிக்கு வர வழி வகுத்துள்ளது.
சட்டீஸ்கரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இழுபறி நிலை நீடித்தாலும் தற்போது பா.ஜ., முந்தி வருகிறது. இங்கும் ஆளும் கட்சியின் சாதனையே இதற்கு காரணமாக இருக்கிறது. நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி செய்த டில்லியில் ஆளும்
காங்கிரசுக்கு தற்போது 3 வது இடம்தான் கிடைத்துள்ளது. இங்கு ஷீலா தீட்ஷித் தனது முதல்வர் பதவியை இழந்தார். முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். டில்லியில் பா.ஜ.,வுக்கு 34 க்கும் மேற்பட்ட இடங்களிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 25 க்கும் மேற்பட்டஇடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் இங்கு இதனால் இங்கு இழுபறி நிலையே நீடிக்கிறது.
ராஜஸ்தானை பொறுத்தவரை இங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தனது ஆட்சியைஇழக்கும் நிலை உருவாகியுள்ளது. மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும்தக்க வைத்துக்கொள்கிறது. மொத்தம் 5 மாநிலங்களில் மிசோரம் நாளை
எண்ணப்படுகிறது . இன்று எண்ணப்பட்டு வரும் 4 மாநிலங்களில் பா.ஜ., 3ல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைநகர் டில்லியை இழக்கிறது. இந்த முடிவுகள் காங்கிரஸ்சுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் போல வரவிருக்கும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்குமோ என்ற பீதி காங்கிரசாருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாத இறுதி வரை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 90 உறுப்பினர்களை உடைய, சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 11 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடந்தது. 230 உறுப்பினர்கள் உடைய, ம.பி., சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 25ம் தேதியும், 200 உறுப்பினர்கள் அடங்கிய, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், டிச., 1ம் தேதியும் நடந்தது. 70 உறுப்பினர்கள் அடங்கிய, டில்லி சட்டசபைக்கான தேர்தலும், 40 உறுப்பினர்கள் அடங்கிய, மிசோரம் சட்டசபைக்கான தேர்தல்(டிச., 4ம் தேதி) நடந்தது.
யார் முதல்வர் ? மத்திய பிரசேதத்தில் மீண்டும் சிவராஜ்சிங் சவுகான், சட்டீஸ்கரில் ராமன்சிங், ராஜஸ்தானில் கடந்த ஆட்சியின்போது முதல்வராக இருந்த வசுந்த்ரா ராஜே ஆகியோர் முதல்வராகவுள்ளனர். டில்லியில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் இங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவரம் தெரியவரும். ஏறக்குறைய தொங்கு சட்டசபை ஏற்படும் சூழல்ஏற்பட்டுள்ளது.
மோடி பிரசாரத்திற்கு பரிசு: இந்த தேர்தலை பொறுத்தவரை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பா.ஜ.,வின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது முதல்
அவர் 5 மாநிலங்களிலும் அவர் சூறாவளி பிரசாரம் செய்தார். இவரது பிரசாரத்தின்போது நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமானால் , பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள், ஊழலை அகற்ற வேண்டுமானால் காங்கிரஸ் அரசை அகற்றுங்கள் என அவரது பிரசாரத்தின் போது முக்கிய அம்சமாக இருந்தது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
யாருக்கும் ஆதரவு இல்லை; ஆம் ஆத்மி: டில்லி சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி கணிசமான தொகுதிகளை பிடிக்கும் . இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் பேசுகையில்: ஒரு வேளை டில்லி சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் எங்கள் கட்சி பா.ஜ., அல்லது காங்., குடன் கூட்டணி வைக்காது, தனித்தே செயல்படும். யார் முதல்வராக வருகிறார் என்பது பற்றி கவலையில்லை, நாட்டுக்கு எப்படி உதவப்போகிறோம் என்பதே எங்களது கவலை என்றார்.
தவறான நடவடிக்கையால் டில்லியில் காங்கிரஸ் அரசு தோல்வியை சந்தித்துள்ளது என டில்லிக்கான பா.ஜ., முதல்வர் வேட்பாளர் ஹர்சவர்த்தன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment