வறட்சி காலத்தின்போது பயிர்களை காப்பதற்கு உண்டான புதிய வகை நுண்ணுயிரி திரவத்தை மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில், வேளாண் தொழிலுக்கு ஏற்ற நவீன பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வறட்சி காலத்தின்போது பயிர்களை காப்பாற்ற உதவும் புதிய வகையான நுண்ணுயிரி திரவத்தை மதுரை வேளாண் கல்லூரி மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். மெத்திலோ பாக்டிரியம் என்ற இந்த புதிய வகை திரவம் ஒரு ஏக்கருக்கு 20 மில்லி லிட்டர் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் போதுமானதாகும். இதன் மூலம் சுமார் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை செடிகள் பச்சையம் மாறாமல் ஈரப்பதத்தோடு இருக்கும். வறட்சி காலங்களின்போது பயிர்களை காப்பாற்ற உதவும் இந்த புதிய வகை நுண்ணியிரி திரவம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே விநாயகபுரத்தில் உள்ள நீர் வேளாண்மை பயிற்சி நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல் விளக்கமும் நடைபெற்றது. வேளாண் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment