Google Find us on Google+ Computer Tips: எக்ஸெல் டிப்ஸ்!

Sunday, December 15, 2013

எக்ஸெல் டிப்ஸ்!

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீ களுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற் கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்
F1 +ALT+SHIFT: புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT: ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற் போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

ஒர்க்புக்கில் போன் எண்: எக்ஸெல் புரோகிராம் நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தும் ஒரு புரோகிராம் ஆகும். பலமுறை இவற்றை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பரிமாறிக் கொள்கையில், ஒர்க்புக்கை உருவாக்கியவர், குறிப்பாக தொலைபேசி எண் ஆகியவற்றை, ஒர்க்புக்கிலேயே குறித்தால் நல்லது என எண்ணுகிறோம். ஆனால், செல்களில் அவற்றைக் குறித்து வைத்தால், சரியாக இருக்காது. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. பைல் மெனுவில் இருந்து, ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது பைல் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள கட்டங்களில், யார் ஒர்க் புக்கினைப் பயன்படுத்தியது மற்றும் நாட்கள் குறித்த தகவல்களை எக்ஸெல் புரோகிராம் அமைத்திருக்கும். இவற்றையும் நீங்கள் மாற்றி அமைக்கலாம். கமென்ட்ஸ் என்ற பகுதியில் அல்லது மற்ற இடங்களில் தொலைபேசி எண்ணை அமைக்கலாம். இதனால், இந்த ஒர்க்புக்கினைக் காணும் மற்றவர்கள், இதனை அமைத்தவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment