Google Find us on Google+ Computer Tips: ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது : உச்ச நீதிமன்றம்

Wednesday, December 11, 2013

ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது : உச்ச நீதிமன்றம்



இந்தியாவில் ஓரின சேர்க்கை குறித்த பொது நலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டப்படி குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்டப்படி தவறில்லை என்று 2009ஆம் ஆண்டில் தில்லி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377ன் படி, ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும். அந்த சட்டத்தின்படி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை தண்டனை வரை அளிக்கப்படலாம். அந்த சட்டம் பலவீனமானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment