Google Find us on Google+ Computer Tips: 2015

Wednesday, June 3, 2015

நூடுல்ஸ் உஷரா்

இரண்டே நிமிடங்களில் சுடச்சுட, மிகவும் ருசியாக தயாராகும் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனால் இது ஆரோக்கியமானது தானா? என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் என்ற பொருட்கள் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிறது. நம் உடலுக்கு வரும் வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவற்றை நூடுல்ஸில் சேர்க்கப்படும் மெழுகு உறிஞ்சி உடலில் தங்க விடாமல் செய்துவிடுகிறது. மேலும், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களையும், அதிக ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற நோய்களையும் ஏற்படுத்திவிடுகிறது.